2025-2026 ஆண்டிற்கான ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட முதல் டிவிஷன்(50 ஓவர் ) லீக் போட்டியில் ஜென்ஒன் அணியினர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.
இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியும் மற்ற அணி களுடன் ஒரு போட்டியில் விளையாட வேண்டும். புள்ளி பட்டியல்படி முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பட்டம் வழங்கப்படும். இதில் ஜென் ஒன் அணியினர் விளையாடிய 9 போட்டியிலும் தோல்வியே தழுவாமல் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். எட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ரெயின்போ கிரிக்கெட் கிளப் 2-ஆம் இடம் பிடித்தது.
இந்நிகழ்வில் ராமநாத புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபா கரன், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளர் ஆர்.ரங்கராஜன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் மாரீஸ்வரன், ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பருக் அப்துல்லா மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் கே.டி.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயம் வழங்கினார்கள்.



