Homeபிற செய்திகள்கோபனாரி மலை கிராமத்தில் 4 வீடுகள் புதுப்பிப்பு

கோபனாரி மலை கிராமத்தில் 4 வீடுகள் புதுப்பிப்பு

ஆனைகட்டி அருகே கோபனாரிமலைகிராமத்தைத் தத்தெடுத்த கோயம்புத்தூர் ரோட்டாரி ஜெனித் சங்கத்தினர், ரூ.10 லட்சம் செலவில் சேதமடைந்த 4 ஓட்டு வீடுகளைப் புதுப்பித்து பயனாளிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும், சோலார் தெருவிளக்குகளும் அமைத்துக் கொடுத்தனர்.

தீபாவளியை முன்னிட்டு கிராம மக்களுக்கு புத்தாடை, இனிப்பு, அசைவ உணவுகள் வழங்கி அவர்களுடன் பண்டிகையைக் கொண்டாடினர். சங்கத்தினரை மலைவாழ் மக்கள் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தும், நடனமாடியும், தாங்களே தயாரித்த பூங்கொத்துகளை வழங்கியும் வரவேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img