காலாண்டு தேர்வு முடிந்து காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன. இதையடுத்து 1 முதல் 7-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கடந்த 26-ந் தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன.
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் 750 தொடக்கப்பள்ளிகள், 172 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 922 பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



