Homeபிற செய்திகள்மஞ்சள் மாநகர மாரத்தான் போட்டி

மஞ்சள் மாநகர மாரத்தான் போட்டி

ஈரோடு சிவில் இன்ஜினியர்ஸ் டிரஸ்ட், விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி மற்றும் தயா அறக்கட்டளை இணைந்து நடத்திய வெற்றிகரமான இரண்டாம் ஆண்டு “மஞ்சள் மாநகர மாரத்தான்” போட்டி, ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியானது கல்லூரி வளாகத்தில் தொடங்கி 5, 7, 10 மற்றும் 21 கிலோமீட்டர் ஆகிய பிரிவுகளில் மாரத்தான் ஓட்டப்பந்தயமாக நடைபெற்றது.


இப்போட்டியினை ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி, மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும், ஈரோடு சிவில் இன்ஜினியர்ஸ் டிரஸ்ட் தலைவருமான டி. சண்முகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
வேளாளர் கல்வி அறக்கட்டளையின் செயலர் செ.து.சந்திரசேகர் தலைமை வகித்தார். கல்லூரியின் நிர்வாகிகள் ச.பாலசுப்ரமணியன், மு.யுவராஜா, கல்லூரி முதல்வர் முனைவர் வெ.ப.நல்லசாமி மற்றும் புலமுதன்மையர் முனைவர் எஸ்.லோகேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.


மலைவாழ் பழங்குடியின மக்களின் சமூக நலன், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் குழந்தை திருமணத் தடுப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த மாரத்தானில் 2,460 பேர் பங்கேற்றனர். மேலும், இப்போட்டியின் மூலம் பெறப்பட்ட நுழைவுக் கட்டணத் தொகையானது மலைவாழ் பழங்குடியின மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img