Homeபிற செய்திகள்உதகையில் இதமான காலநிலையுடன் துவங்கியது இரண்டாவது சீசன்: மலர் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்

உதகையில் இதமான காலநிலையுடன் துவங்கியது இரண்டாவது சீசன்: மலர் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இரண்டாவது சீசன் நடைபெறுகிறது. இத மான காலநிலை நிலவும் இந்த மூன்று மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிப்பது வழக்கம்.
இதனை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இரண்டாவது சீசன் மலர் கண்காட்சி நடத்தப் படுவது வழக்கம்.

அதேபோல், இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது சீசன் மலர் கண்காட்சிக்காக டேலியா, சால்வியா, மேரிகோல்ட், பிரெஞ்சு மேரிகோல்ட், பிகோனியா, சைக்லமன், பேன்சி, பெட்டூனியா, ஜினியா, ஸ்வீட் வில்லியம், அஜிரேட்டம் உள்ளிட்ட 70 வகையான மலர் செடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதில் பூத்துக் குலுங்கும் 15 ஆயிரம் மலர் தொட்டிகளை மலர் மாடங்களில் அடுக்கி வைக்கும் பணியை தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் மரகதமணி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பூங்கா ஊழியர்கள் மலர் தொட்டிகளை மலர் மாடங்களில் அடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், பூங்காவின் பிற பகுதிகளில் நடவு செய் யப்பட்டுள்ள சுமார் 5 லட் சம் மலர் செடிகளிலும் தற்போது வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கி யுள்ளன.
இதனிடையே, மலர் தொட்டிகளை மலர் மாடங்களில் அடுக்கும் பணிகள் இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடையும் நிலையில், இரண்டாவது சீசன் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img