Homeபிற செய்திகள்சிலம்பிமங்கலம் மனுநீதி நாள் முகாமில்ரூ.1.41 கோடிக்கு நலத்திட்ட உதவிகள்

சிலம்பிமங்கலம் மனுநீதி நாள் முகாமில்ரூ.1.41 கோடிக்கு நலத்திட்ட உதவிகள்

புவனகிரி வட்டம் சிலம்பிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், 241 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 41 லட்சத்து 96 ஆயிரத்து 976 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
வருவாய்த்துறை சார்பில் 189 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தில் 11 பேருக்கு இறப்பு நிவாரணம், வேளாண்துறை சார்பில் 8 பேருக்கு வேளாண் உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பேருக்கு காதுகேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன. மேலும், சுகாதாரத்துறை சார்பில் 5 பேருக்கும், உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில் 10 பேருக்கும், மகளிர் திட்டம் சார்பில் 10 பேருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமையொட்டி அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டர் முருகையன், சார் ஆட்சியர் (பொ) தனலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img