fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரியில் 250 மாணவர்கள் அபாகஸ் மூலம் உலக சாதனை

தர்மபுரியில் 250 மாணவர்கள் அபாகஸ் மூலம் உலக சாதனை

தர்மபுரியில், கலாம் அபாகஸ் சார்பில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில், 250 மாணவர்கள் ஒரே நேரத் தில் 1 மணி நேரத்தில் 2 லட்சத்து 8 ஆயிரம் (2,08,000) கணக்குகளை அபாகஸ் மணக்கணக்கு முறையில் இடது கையால் செய்து உலக சாதனை படைத்தனர்.


இந்நிகழ்ச்சி, யுனிக்யூ கான்செப்ட் மேக்ஸ் அபாகஸ் நிறுவனத் தலைவர் நந்தினி அழகர் தலைமையில் நடைபெற் றது. இதில் கலாம் நிறுவனத் தலைவர் குமரவேல் மற்றும் அனைத்து நுகர்வோர் உரிமை அறக்கட்டளை தலைவர் அப்பாதுரை ஆகியோர் கலந்து கொண்டு, உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினர்.


மேலும், எதிர்காலத்தில் இதைவிட மிகப்பெரிய உலக சாதனைகளை மாணவர்கள் படைக்க வேண்டும் என வாழ்த்திய அப்பாதுரை, நிகழ்ச்சிக் காக ரூ.1 லட்சம் நன் கொடையாக வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img