fbpx
Homeபிற செய்திகள்கோவையில் தற்காப்பு கலை போட்டி

கோவையில் தற்காப்பு கலை போட்டி

கோவை தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றிய கலை மற்றும் கலாச்சார அணி சார்பாக கோவை செட்டிபாளையம் பகுதியில் மாவட்ட அளவிலான தற்காப்பு கலை போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியினை தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜய் துவக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி அவர் பாராட்டுகளை தெரிவித்தார்.
இவருடன் இணைந்து தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியினை தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி நிறுவனர், கலை மற்றும் கலாச்சார அணி ஒன்றிய அமைப்பாளர் சதீஸ், மற்றும் பயிற்சியாளர்கள் சேகர், சபரீஷ், பால மணிகண்டன் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img