fbpx
Homeபிற செய்திகள்குழந்தைகளுக்கான 45 நூலகங்களின் கட்டுமான பணிகளை கடலூர் கலெக்டர் ஆய்வு

குழந்தைகளுக்கான 45 நூலகங்களின் கட்டுமான பணிகளை கடலூர் கலெக்டர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்காக அமைக் கப்படும் 45 பிரத்யேக கிளை நூலகங்களின் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
கடலூர் சொரக்கால் பட்டு பகுதியில் உள்ள மாவட்ட மைய நூலக வளாகத்தில் ரூ.22 லட் சம் மதிப்பீட்டில் 585 சதுர அடி பரப்பளவில் குழந்தை களுக்கான கிளை நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை நேரில் பார்வையிட்ட கலெக்டர், திட்டமிட்ட காலக்கெடுவுக் குள் தரமாகப் பணிகளை முடித்து, குழந்தைகளின் வாசிப்புத்திறன் மற்றும் அறிவாற்றலை மேம் படுத்தும் அனைத்து வசதிகளுடன் நூலகத்தை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகளவில் நூலகத்தை பயன்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.இது குறித்து கலெக்டர் கூறு கையில், “பள்ளி மாணவர் களின் அடிப்படை கற்றல் திறனை உயர்த்தும் நோக்கில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் சிறப்பு உதவித் திட் டத்தின் கீழ் 45 குழந் தைகள் நூலகங்கள் அமைக்க அனுமதி வழங் கப்பட்டுள்ளது” என்றார்.
இதுவரை 33 நூலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், மீதமுள்ள நூலகங்களின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆய்வின்போது மாநக ராட்சி ஆணையாளர் கிஷன்குமார், மாவட்ட நூலக அலுவலர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img