fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்துறைக் கருத்தரங்கம்

ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்துறைக் கருத்தரங்கம்

ஈரோடு நந்தா தொழில் நுட்பக் கல்லூரியின் அறிவியல் மற்றும் மனிதநேயத் துறை சார்பில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலுடன் (சி.எஸ்.ஐ.ஆர்) இணைந்து “ஆற்றல் சேமிப்புச் சாதனங்களுக்கான சுற்றுச் சூழல் நட்பு மற்றும் நிலையான மின் தேக்கிகள்” என்கிற தலைப்பில் தேசிய அளவிலான தொழில்துறைக் கருத்த ரங்கம் நடைபெற்றது.


ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சித் துறையின் அறிவியலாளர் முனைவர் எம்.சதீஸ் மற்றும் சேலம் அரசு பெண்கள் கல்லூரியின் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் எம்.பார்த்திபவர்மன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். கல்லூரியின் முதல்வர் முனைவர் ச.நந்தகோபால் முன்னிலை வகித்து கருத்தரங்கினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவரித்தார். முன்னதாக துறையின் தலைவர் என் விஜயகுமார் வரவேற்று பேசினார்.
நிகழ்வின் முடிவில் வேதியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பி. பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img