முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு கோவை ஈச்சனாரி – பாலக்காடு ரோட்டில் உள்ள நிறுவனத் தின் மைதானத்தில் ஜனடிக்ஸ் இந்தியா நிறுவனம், பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி, நேரு நகர் லயன்ஸ் சங்கம் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட பலவகை மரங்கள் நடப்பட் டன.
செந்தமிழ் அறக்கட் டளை கனகசுப்பிரமணி, மரம் யோகநாதன், உறுப்பினர் பெருக்கம் மாவட்ட தலைவர் லயன் எஸ்.செந்தில்குமார் ஆகி யோர் தலைமையில் சுற்றுச்சூழல் மற்றும் பாது காப்பு ஜெயமோகன் மற்றும் கோபிநாத், ஐஎஸ்ஓ சான்றிதழ் பொறுப்பு பால் கண்ணன், நிர்வாகத் துறை சரவணன், இயக்க மேலாண்மை தலைவர் சுரேஷ், மனித வளம் மல்லிகா, ஜி.எம். ஏ.முத்து சாமி ஆகியோர் மரங்களை நட்டு துவக்கி வைத்தனர்.



