கரூர் மண்டல அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து, சிறப்புக் குழந்தைகளுக்கான தங்கமே தங்கம் மகிழ்ச்சி திருவிழா சேவைத் திட்டத்தை டி.வி.ஆர். சரஸ்வதி வெங்கட்ராமன் மஹாலில் நடத்தின.
ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் ஆர். சுப்பிரமணி தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். ஏசியன் பேப்ரிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஏசியன் பவுண்டேஷன் தலைவர் என்.ஆர். வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சமூகப் பொறுப்பு நிதி மூலம் ரோட்டரி பன்னாட்டு அறக்கட்டளைக்கு ரூ.2.35 கோடி வழங்கியதற்காக அவருக்கு பாராட்டு மற்றும் கௌரவம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்புக் குழந்தைகளின் தனித்திறமைகளைவெளிப் படுத்தும் மேடை நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோ சனை அமர்வு கள் நடைபெற்றன. ரோட்டரி மாவட்ட 3000 முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். 2028–29 மாவட்ட ஆளுநராக தேர்வாகியுள்ள மீனா சுப்பையா, குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.



