செயற்கை நுண்ணறிவை நம்நாட் டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண் டும் என்று காந்திகிராமம் பல்கலை யில் நடைபெற்ற டிரிவிஸ்டா-2026 கருத்தரங்கில் பல்கலை துணை வேந்தர் ந.பஞ்சநதம் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பயன்பாடுகள் துறை, செயற்கை நுண்ணறிவு தரவு அறிவியல் மையம் சார்பாக டிரிவிஸ்டா-2026 என்னும் தலைப்பில் ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய பல்கலைக் கழக துணை வேந்தர் ந.பஞ்சநதம் தனது உரையில், செயற்கை நுண்ணறிவு எவ்வாறு நமது அன்றாட வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதை சிறப்பாக எடுத்துரைத்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகங்களைத் தாண்டி, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே செயற்கை நுண் ணறிவு மாறிவிட்டதாக கூறிய அவர் தனி மனித வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச் சிக்கும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும் என்றார்.
அதன்பின்னர் காந்திகிராமம் பல்கலை பேராசிரியர் கலைச்செல்வி எழுதிய ‘ஜாவா புரோகிராமிங்-எ பிகின்னர்ஸ் கைடு’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். கருத்தரங்கில்; பதிவாளர் (பொறுப்பு) சுந்தரமாரி, கணினி அறிவியல் மற்றும் பயன் பாடுகள் துறை தலைவர் மேரி சாந்திராணி, ஒருங்கிணைப்பாளர் சண்முக வடிவு, அயர்லாந்தின் லிமெரிக் பல்கலைகழகத்தின் ஆய் வாளர் தமிழினியன், ஹைதராபாத் எக்ஸெல்ரா நாலெட்ஜ் சொல்யூ சன்ஸ் நிறுவன செயற்கை நுண்ண றிவு துறைத் தலைவர் ஜாபர்ஷா ஜஹாங்கீர் ஆகியோர் சிறப் புரை ஆற்றினார்கள். கருத்தரங்கில் மார்பக புற்றுநோய் கண்டறிதல், முக உணர்வு அடையாளம் காணுதல், லுகேமியா கண்டறிதல், தாவர நோய் கண்டறிதல், உள்ளிட்ட மனித சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த 15 பிரச்சினைப் பகுதி களை மையமாகக் கொண்டு மாணவர்கள் தங்கள் மாதிரிகளை உருவாக்கியிருந்தனர். டிரிவிஸ்டா-2026 நிகழ்வு சாதனை, இணைப்பு மற்றும் பங்களிப்பு ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் மிகச் சிறப் பாக நிறைவடைந்தது.
நிறைவாக பேராசிரியர் டி.கலைச்செல்வி நன்றி கூறினார்.



