fbpx
Homeபிற செய்திகள்கோவையில் இன்று முதல் ஆண்கள் ஹாக்கி தேசிய சாம்பியன் போட்டிகள்

கோவையில் இன்று முதல் ஆண்கள் ஹாக்கி தேசிய சாம்பியன் போட்டிகள்

இந்திய ஹாக்கியின் வருங்கால நட்சத்திரங்களை அடையாளம் காணும் 16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப்-2026 போட் டிகள், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆஸ்ட்ரோ டர்ஃப் ஹாக்கி மைதானத்தில் நடை பெறுகின்றன. தமிழ்நாடு ஹாக்கி அலகு, ஹாக்கி இந்தியா வின் ஆதரவுடன் நடத்தும் இந்த தேசிய அளவிலான போட்டியில், நாடு முழுவதும் உள்ள 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. 12 நாட்கள் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 700-க்கும் மேற்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் என பலர் பங்கேற்கின்றனர்.
இந்த தகவல்களை அகில இந்திய ஹாக்கி சங்கத்தின் பொருளாளர் சேகர் ஜெ. மனோகரன் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி அலகின் பொதுச் செயலாளர் டாக்டர் பி. செந்தில்ராஜ்குமார் ஆகியோர் கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img