தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பெரியகுளம் ஒன்றிய அளவிலான குறுவட்ட போட்டிகள் கடந்த 1 வாரமாக நடைபெற்றது. இதில் கபடி, குண்டு எறிதல், வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் பெரியகுளம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 30-க் கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து கபடி போட்டியில் விளையாடிய சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 17-வயதுக்குட்பட்ட பிரிவில் மாணவிகள் ஆர்த்தி, சுபிக்வி, சிவரஞ்சனி, பாவனாதேவி, கிர்ஷிதா, அட்ஷயா, கனிஷ்கா, கீர்த்தனா, தேவிதா, ரித்திகா அணியினர் முதல் இடத்தையும், 14-வயதுக்குட்ட பிரிவில் மாணவிகள் யுவிதா, ஜீவிதா ஸ்ரீ, லாவண்யா, அஸ்மிதா, கௌசிகா, விதர்ஷனா, தனலட்சுமி, ஹாசினி, பாண்டிச்செல்வி, திர்ஷிதா, வைஷ்ணவி, ஜெனிஷா அணியினர் முதல் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். மேலும் வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பள்ளி வளாகத்தில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஜமின்தார் ஆகியோரை தலைமை ஆசிரியர் பாண்டி, மற்றும் ஆசிரியர் பெருமக்கள் பாராட்டி வாழ்த்தினர். மேலும் வெற்றி பெற்ற மாணவிகளை நேரிலும், சமூக வலைதளங்களிலும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகின்றனர். வைகை அணை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சிலம்பம், சதுரங்க போட்டிகள் கடந்த வாரம் 3 நாட்களாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



