சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வை எழுதிய ஆகாஷ் நிறுவனத்தின் 2.25 லட்சம் மாணவர்களில், ஈரோடு கிளையைச் சேர்ந்த நிகில் சிவானந்தன் 720க்கு 691 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில் 92-வது இடத்தைப் பிடித்துள்ளார் என்று ஆகாஷ் நிறுவனத்தின் மூத்த உதவி மேலாளர் ராகவேந்திரா தெரிவித்துள் ளார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா ஈரோடு ஆகாஷ் அலுவலகத்தில் இன்று நடந்தது. நிகழ்வில் அவர் கூறியதாவது:
இந்த ஆண்டு ஆகாஷ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவச் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார். மேலும், அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் 4 மாணவர்களும், 50 இடங்களுக்குள் 20 மாணவர்களும், 100 இடங் களுக்குள் 56 மாணவர்களும் இந்த நிறுவனத்திலிருந்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து, ஈரோடு ஆகாஷ் கிளையைச் சேர்ந்த ஆர்.ஆதியன் 647 மதிப்பெண்களும் (அகில இந்திய தரவரிசை: 1649), ஆராதனா விக்னேஷ் 645 மதிப்பெண்களும் (தரவரிசை: 1808), எல்.எம். தீஸ்னா 590 மதிப் பெண்களும் (தரவரிசை: 13726), வி.கே. அபினவ் 587 மதிப்பெண்களும் (தரவரிசை: 14919) பெற்று சாதனை படைத்துள்ளனர். இத்தேர்வை நாடு முழுவதிலும் இருந்து சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
37 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஆகாஷ் நிறுவனம், 425-க்கும் மேற்பட்ட கிளைகளுடன், நீட், ஜே.இ.இ (JEE), என்.டி.எஸ்.இ, ஒலிம்பியாட் போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயிற்சி யளித்து வருகிறது. நிகழ்வில் ஆகாஷ் அதிகாரிகள் பிரதிப் உண்ணி கிருஷ்ணன் மற்றும் கோபிநாத் கலந்து கொண்டனர்.



