ஈரோடு விஇடி கல்லூரியின் சமூகவியல் துறை சார்பாக, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் நிதி நல்கையுடன் இருநாள் தேசிய ஆய்வரங்கம் கல்லூரியின் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. “நெசவுத் தொழிலாளர்களிடையே நிதி அறிவுத்திறன், நிதி உள்ளடக்கம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு: கொள்கை கண்ணோட்டங்கள் மற்றும் வளர்ச்சி சவால்கள்” என்ற தலைப்பில் இந்த ஆய்வரங்கம் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் த.தினேஷ் மற்றும் சமூகவியல்துறை உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர்யாசிர் அஷ்ரஃப் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது.
கணினி அறிவியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் டி. கார்த்திகா வரவேற்புரை ஆற்றினார். வேளாளர் கல்வி அறக்கட்டளையின் செயலர் மற்றும் தாளாளர் செ.து.சந்திரசேகர் தலைமையுரை வழங்கினார். வேளாளர் அறக்கட்டளையின் நிர்வாகி ச.பாலசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் வெ.ப.நல்லசாமி தொடக்க உரையாற்றினார். கணிதத்துறை உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் சி.ராதிகா சிறப்பு விருந்தி னர்களுக்கான அறிமுக உரையை வழங்கினார்.
டெல்லி பெண்கள் மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் என்.மணி மேகலை முதன்மை உரையாற்றுகையில், “குடும்பங்களின் நிதி நடத்தை மற்றும் மீள்தன்மை” என்ற தலைப்பில் நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதார சவால்களைப் புள்ளிவிபரங்களுடன் விளக்கினார். சமூகவியல் துறைத் தலைவர் முனைவர்யாசிர் அஷ்ரஃப் நன்றியுரை வழங்கினார்.
ஆய்வரங்கின் நிறைவு விழாவில் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் முனைவர் பொ.மா.பழனிச்சாமி இருநாள் கருத்தரங்க நிகழ்வுகள் குறித்து வாழ்த்திப்பேசினார். சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர் திரு. பி. பிரபு இருநாள் நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கையைச் சமர்ப்பித்தார். சமூகவியல் துறைத் தலைவர் முனைவர்யாசிர் அஷ்ரஃப் நன்றி கூறினார்.



