கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள புரோசோன் மால் தனது 9ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, “வி ஆர் டேர்னிங் 9” என்ற தலைப்பில் 3 நாட்கள் சிறப்பு கொண்டாட்டங்களை நடத்துகிறது.ஜூலை 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் இவ்விழாவையொட்டி, மால் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி, 100-க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் 60 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.
மேலும், ரூ.5,999-க்கு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 மதிப்பிலான பொருட்களும், ரூ.9,999-க்கு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களும் ஸ்பார் ஹைப்பர் மார்க்கெட் சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது.மேலும், 3 நாட்களும் நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், ‘தோரணமாயிரம்‘ நிகழ்ச்சி, டிஜே பிளாக் இசை நிகழ்ச்சி, ‘ஸ்டிரம்ஸ் என் ஹம்ஸ் சிங் அலோன்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



