கியா இந்தியா நிறுவனம் தனது இரண்டாவது மாஸ்-மார்க்கெட் மின்சார எஸ்யூவி மாடலான சைரோஸ் இவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான முன்பதிவு ரூ.25 ஆயிரம் செலுத்தி கியா டீலர்ஷிப்கள் மற்றும் நிறுவனத்தின் இணையதளம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.சைரோஸ் இவி காரில் 51.4 கிலோவாட் மணி திறன் கொண்ட
பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ARAI சான்றளித்தபடி 526 கி.மீ. வரை பயணிக்கும் திறன் கொண்டதாகும்
.
மேலும், 42 கிலோவாட் மணி பேட்டரி கொண்ட மாடல் 443 கி.மீ. வரை செல்லும் திறன் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் 20,300-க்கும் மேற்பட்ட சார்ஜிங் மையங்களை கொண்ட கியா கே-சார்ஜ் வசதியையும் இந்த வாகனம் ஆதரிக்கிறது.30 அங்குல டிரினிட்டி பனோரமிக் டிஸ்ப்ளே, லெவல்-2 ஏடிஏஎஸ் பாதுகாப்பு தொழில்நுட்பம், 6 ஏர்பேக்குகள், கியா கனெக்ட் 2.0,வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும்
ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்ட நவீன வசதிகளுடன் சைரோஸ் இவி அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.



