fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு

கோவை அருகே உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், 2001ம் ஆண்டு பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்களின் 25ம் ஆண்டு (வெள்ளி விழா) சந்திப்பு நடைபெற்றது.இந்த நிகழ்வின் கல்லூரியில் பயிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்வி, திறமையான மாணவர்களுக்கு உதவித்தொகை, தொழில் முனை வோர் முயற்சிகள் (ஸ்டார்ட்-அப்) மற்றும் ஆராய்ச்சி, புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.30 லட்சம் நன்கொடையாக முன் னாள் மாணவர்கள் வழங்கினர்.


முன்னதாக இந்நிகழ்வில் மாணவ சங்கத் தலைவர் வீணா ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி சி.வி.ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி.மகேஷ் குமார், கல்லூரி முதல்வர் எ.சௌந்தர்ராஜன் மற்றும் பல நாடுகளில் பணியாற்றி வரும் 125-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img