fbpx
Homeபிற செய்திகள்தமிழக ஆளுநரை ஊட்டியில் வரவேற்ற யூத் ஹாஸ்டல்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள்

தமிழக ஆளுநரை ஊட்டியில் வரவேற்ற யூத் ஹாஸ்டல்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள்

யூத் ஹாஸ்டல்ஸ் அசோசியேசன் ஆப் இந்திய தேசிய செயற்குழு கூட்டம் அதன் தலைவரும் தமிழக ஆளுநரு மான ராஜேந்திர விஸ்வநாத் அர் லேக்கர் தலைமையில் ஊட்டியில் நடைபெற்றது. முன்னதாக அவரை தமிழக தலைவர் வெங்கட்நாராயணன், துணைத் தலைவர் ஈரோடு டாக்டர் ராஜா, கிளையின் தலைவர் மகேந்திரன், கிளையின் பொருளாளர் ஸ்டாலின், இணைச்செயலாளர் ராஜசூர்யா, தமிழக பிரசிடெண்ட் பஞ்சாபிகேசன், பொருளாளர் ஜீவானந்தம், பாஸ்கர், ஜெயக்குமார், ஜெய கிருஷ்ணன், முரளி கிருஷ்ணன், சங்கர், சங்கர் நாராயணன், கூத்தன் மனோகர், டாக்டர் முத்து கார்த்தி, நாகேஷ், ஸ்ரீதர், சந்திரசேகர் & சுப்பிரமணியம் ஆகியோர் வரவேற்றனர்.

மேகாலயா நான்சியான், கோவா ஜோஷி, கேரளா ஷைன், கர்நாடகா சுதர்சன் பாய், பாண்டிச்சேரி எழிலன், ஆந்திரா ரவிபால், தெலுங்கானா வெங்கட் யாதவ், டெல்லி ஸ்ரீ வஸ்தவ், மேற்கு வங்காளம் ரவிசங்கர் பால், ரவிக்குமார், சரண்ஜித், குஜராத் ஜிப்பா, சட்டீஸ்கர் சுப்பிரமணியம், ஹரியானா பவன் குமார், கோவா மயூரிஸ், கோவா ரூபா நாயர், மகாராஷ்டிரா லட்சுமி அருண், மத்திய பிரதேஷ். அசோக், உத்தர் பிரதேஷ் சர்மா, கர்நாடகா புருஷோத்தமன், ஜார்கண்ட் பௌமிக், மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆளுநர் முன்னிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்த மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் பிருந்தா, மாவட்ட வனத்துறை அலுவலர் கஷ்யப் ஷெஷாங்க் ரவி, முதுமலை இணை இயக்குனர், முதுமலை கள இயக்குனர் மற்றும் அனைத்து அரசு துறைக ளுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆளுநர், யூத் ஹாஸ்டல் செயற்குழு உறுப்பினர்களுடன் மதிய உணவு எடுத்துக்கொண்டார். இந்த செயற்குழு கூட்டத்தை தமிழக தலைவர் வெங்கட்நாராயணன் மற்றும் செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img