fbpx
Homeபிற செய்திகள்ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் வேளாண்மை வாடிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் வேளாண்மை வாடிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கோவை நிர்வாக அலுவலகம் சார்பில் வேளாண்மை (SBI Smart Agri) வாடிக்கையாளர்கள் சந்திப்பு 2026 நிகழ்ச்சி ஹோட்டல் ரெசிடென்சி டவர்ஸில் நேற்று (ஜூன் 15) நடைபெற்றது. இந்நிகழ்சியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 120 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஹரிதா பூர்ணிமா (பொது மேலாளர், நெட்வொர்க் III, LHO சென்னை), எஸ்.எல்.அருண்(துணை பொது மேலாளர், வணிகம் மற்றும் செயல்பாடுகள், கோவை) ஆகியோர் பங்கேற்று வங்கியின் விவசாயிகளுக்கு வழங்கும் சேவைத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும் வங்கியின் உயர் அலுவலர்கள், விவசாயிகளுடன் நேரடியாக கலந்து ரையாடி, விவசாய நிதி மற்றும் வங்கி சேவைகள் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இந்நிகழ்ச்சியையொட்டி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முக்கிய விவ சாய தயாரிப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்த விளக்க காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதில் கிசான் சம்ரிதி ரின், அக்ரி இன்ஃப்ரா நிதி, அக்ரி உணவு மற்றும் நிறுவ னங்கள் கடன் (AFEL) – PMFME, பிரதான் மந்திரி மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் முறைப் படுத்தல் திட்டம் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நடத்திய இந்த நிகழ்ச்சி தங்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கியது என்றும் சேவைகள் மற்றும் அரசு சார்ந்த விவசாய திட்டங்களை புரிந்துகொள்ள இது உதவியாக இருந்ததாகவும் பங்கேற்ற விவசாயிகள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img