ஸ்பிரிங்ஸ் இந்தியா பவுண்டேஷன், கோயம்புத்தூர் மற்றும் தி ஐ பவுண்டேஷன், ஈரோடு இணைந்து பர்கூர் பழங்குடியினர் மையத்தில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடத்தியது.
இதில் 30 மலை கிராமங்களிலிருந்து ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பங்கு பெற்றனர். இம்முகாமை பர்குர் பழங்குடியினர் மைய தலைவர் ஜேக்கப் பெல்லி துவங்கி வைத்தார். பர்குர் ஏஜிஎம் நிறுவன தலைவர் பால் தனஞ்ஜெயன் வரவேற்புரை நல்கினார். ஸ்பிரிங்ஸ் இந்தியா பவுண்டேஷன் மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் இயக்குனர் ஏஞ்ஜெலின் ஜெ வில்லியம்ஸ் இம்முகாமிற்கான அவசியத்தை எடுத்துரைத்தார்.
தி ஐ பவுண்டேஷன் குழுவி னர் மலைவாழ் மக்களுக்கு கண் பரிசோதனைகளையும், ஆலோசனை களையும் தொடர் சிகிச்சைக்கான வழிமுறைகளையும் கூறினர்.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஸ்பிரிங்ஸ் இந்தியா பவுண்டேஷன் தலைவர் மைக்கேல், பர்குர் ஏஜிஎம் நிறுவன தலைவர் பால் தனஞ்ஜெயன் மற்றும் உறுப்பினர் ரமேஷ், என்எம்எஸ் பர்குர் தலைவர் கலையரசன் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும், பர்குர் மலைவாழ் மக்க ளுக்கான கண்தொடர் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், இதுபோன்ற சிறப்பு முகாம்கள் அடிக்கடி நடத்தப்படும் என்றும் கூறினர்.



