fbpx
Homeபிற செய்திகள்இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தக தூதராக விஷ்ணுபிரபு நியமனம்

இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தக தூதராக விஷ்ணுபிரபு நியமனம்

இந்தியா – ஆசியான் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக சி.எம். விஷ்ணு பிரபு அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். டில்லியில் நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பில் உள்ள புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் தைமூர்-லெஸ்தே ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இந்த நியமனம் கருதப்படுகிறது.

நியமன விழாவில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், உயர் ஆணையர்கள், தூதரக அதிகாரிகள், தொழில் முனைவோர், வணிகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நிகழ்வில் உரையாற்றிய இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சில் மற்றும் யுனைடெட் டிப்ளமேட்டிக் கவுன்சில் பிரதிநிதிகள், பிராந்திய இணைப்புகளை மேம்படுத்துதல், எல்லை தாண்டிய முதலீடுகளை எளிதாக்குதல், தொழில் முனைவோரை ஊக்குவித்தல் மற்றும் இந்தியா – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வணிக சமூகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் தொடர்ந்து செயல்படுவதாக தெரிவித்தனர்.

இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சில், இந்தியா மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், முதலீடு, வணிக ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் முக்கிய அமைப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img