fbpx
Homeபிற செய்திகள்குழந்தைகளுக்கான இருதய நோய் கண்டறியும் முகாம்

குழந்தைகளுக்கான இருதய நோய் கண்டறியும் முகாம்

விருதுநகர் ரோட்டரி சங்கம் மற்றும் மாதா அமிர்தானந்தமயி டிரஸ்ட் இணைந்து ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்கான பிறவி இருதய நோய் கண்டறியும் முகாம் நடத்தி வருகின்றனர்.

நான்காம் ஆண்டாக நடத்திய குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம் விருதுநகர் கே.வி.எஸ் நூற்றாண்டு பள்ளி வளாகத்தில் டாக்டர் பாலாஜி ஸ்ரீ முருகன் தலைமையில் டாக்டர்கள் பாலகணேஷ் கார்மேகராஜ், நிஷாந்த், செல்வம் குழுவினரின் உதவியுடன் நடைபெற்றது.

இதில் குழந்தைகளுக்கு உயரம், எடை, எக்கோ, இசிஜி பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்த முகாமில் 200 குழந்தைகளுக்கு மேல் கலந்து கொண்டனர்.

20 குழந்தைகளுக்கு இருதய நோய் இருப்பதை கண்டறிந்து மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச் சென்று சிகிச்சை செய்ய இருக்கின்றனர்.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் தினேஷ் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் ஆளுநர்கள் டாக்டர் சின்னத்துரை, அப்துல்லா, முருகதாஸ் கலந்து கொண்டனர். மற்ற ஊர்களில் இருந்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் மயில் பாலசுப்பிரமணியம், சங்கரநாராயணன் கலந்து கொண்டனர்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மகேஷ் குமார், ராஜீவன், எஸ்பிஜிசி ஸ்ரீ முருகன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

மேலும் விருதுநகர் ரோட்டரி சங்க தலைவர் பெத்தநாச்சி, சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காமராஜ் பொறியியல் கல்லூரி ரோட்டிராக்ட் சங்கத்தினரும் பங்கேற்று உதவினர். நிறைவில் செயலாளர் சாரதா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img