fbpx
Homeபிற செய்திகள்பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் 38வது பட்டமளிப்பு விழா, கல்லூரியின் கொங்கு பல்கலைக்கழக மையத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் 2025ஆம் ஆண்டு மே மாதம் கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டம் அளிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இளம் பட்டதாரிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.

மொத்தம் 1908 பட்டதாரிகள் (இளங்கலை: 1593, முதுகலை:315) பட்டம் பெற்றனர்.

மேலும் இவ்விழாவில் படிப்பில் சிறந்துவிளங்கி, உயர்தரம்பெற்ற 118 பேருக்கு (இளங்கலை: 99, முதுகலை:19) பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கொங்கு வேளாளர் தொழில் நுட்பக்கல்வி அறக்கட்டளை தலைவர் சி.தேவராஜன், செயலாளர் ஆர்.ஆர்.சத்யமூர்த்தி, பொருளாளர் ஈ.ஆர்.கார்த்திகேயன், கல்லூரியின் தாளாளர் ஈ.ஆர்.கே.கிருஷ்ணன், அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினர்கள், முதல்வர் முனைவர். ஆர். பரமேஸ்வரன், பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் முதன்மையர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img