fbpx
Homeபிற செய்திகள்ஹாஸ்டல் ஓனர்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு

ஹாஸ்டல் ஓனர்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு

ஹாஸ்டல் ஓனர்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் (HOWA), கோவை அமைப்பின் முதல் பொதுக்கூட்டம் ஜெ.ஆர் ஹாலில் நடைபெற்றது.

இதில் 80-க்கும் மேற்பட்ட ஹாஸ்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஹாஸ்டல் லைசன்ஸ் பெறும் நடைமுறை, தேவையான ஆவணங்கள், நிர்வாக குழு, நிர்வாக செயற் குழு, ஆலோசனை குழு உறுப்பினர்கள் அறிமுகம், உறுப்பினர் சந்தா, சங்க விதிமுறைகள் மற்றும் சங்க அமைப்பு தொடர்பான விவரங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தின் புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு: ஆலோசனை குழு உறுப்பினராக கிருஷ்ண குமார், தலைவராக லலிதா மோகன்ராஜ், செயலா ளராக ஸ்ரீ ஹரிதா, பொருளாளராக டாக்டர் ஹம்சவேணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காண கேள்வி – பதில் அமர்வு நடை பெற்றது. அனைவரும் கட்டாயமாக லைசன்ஸ் பெறுவதின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

ஏற்கனவே லைசன்ஸ் பெற்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, மற்ற உறுப்பினர்களுக்கு பயனுள்ள வழிகாட்டுதலை வழங்கினர்.

ஹாஸ்டல் ஓனர்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் அனைத்து ஹாஸ்டல் உரிமையாளர்களையும் சங்கத்தில் இணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு, ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக மக்கள் தொடர்பாளர் லயன் எஸ்.செந்தில்குமார் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img