fbpx
Homeபிற செய்திகள்மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிடும் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் கரங்களில்...

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிடும் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் கரங்களில் ஒப்படைப்போம்- தேர்தல் அலுவலகம் திறந்து செந்தில்பாலாஜி சூளுரை

கோவை மாவட்டத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிடும் 10 தொகுதியிலும் வெற்றி பெற்று திமுக தலைவருடைய கரங்களிலே ஒப்படைப்போம் என்று தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சூளுரைத்தார். கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளரும், முன் னாள் அமைச்சருமான செந் தில்பாலாஜி கோவை நஞ்சப்பா ரோட்டில் தேர்தல் அலு வலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:

தேர்தல் அலுவலக பணிமனை அமைக்கப்பட்டிருக்கிறது. அதை திறப்பதற்கு மாலை 5 மணிக்கு நீங்கள் வருகை தர வேண்டும் என்றுதான் என்னிடத்திலே மாவட்ட கழகச் செயலாளர் அன்பிற்குரிய செந்தமிழ் செல்வன் சொன்னார். இங்கு வந்த பிறகுதான் தெரிகிறது, இது அலுவலகத் திறப்பு விழாவைப் போல் இல்லை; ஒரு மாநாட்டைப் போல பெருந்திரளாக வரவேற்பை தந்திருக்கின்றார்கள். ஒரு எழுச்சியோடு பங்கெடுத்திருக் கின்ற கழகத்தினுடைய நிர்வாகிகள், தோழமை இயக்கத்தி னுடைய நிர்வாகப் பெருமக்கள், பேரன்பிற்குரிய தாய்மார்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு மிகப்பெரிய ஒரு வரவேற்பை தந்திருக்கின்றார்கள்.

தலைவர் மற்றும் முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து, இன்று இந்த அலுவலகத் திறப்பு விழாவிலே பங்கெடுத்திருக்கின்ற தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அத்தனை வாக்காளப் பெருமக்களுக்கும் என்னுடைய அன்பான நன்றியை இந்த நேரத்தில் பணிவன்போடு சமர்ப் பிக்கிறேன்.

கோவையில் இருக்கக்கூடிய 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி முதல் தொகுதியாக முன்னிலை பெற்ற தொகுதியாக வளர்ச்சி பெற்ற தொகுதியாக அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றிய தொகுதியாக ஐந்து ஆண்டுகளில் முழுமையாக மாற்றிட தலைவருடைய நல்லாசியோடு அனைத்து பணிகளையும் கொண்டு வந்து செயல்படுத்துவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நம் எதிரே இருக்கின்ற செம்மொழி பூங்கா, அதேபோல அவிநாசி சாலையில் அமைந்தி ருக்கக்கூடிய ஜிடி நாயுடு மேம்பால பணிகள் அதேபோல தங்க நகைகளுக்கான பூங்கா அமைக்கக்கூடிய பணிகள், பெரியார் பெயரிலே அமைந்தி ருக்கக்கூடிய மிகப் பிரம்மாண் டமான நூலகங்கள், ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கான நிலம் எடுப்பதற்கான நிதிகள், இப்படி தொடர்ச்சியாக பல்வேறு சிறப்பு நிதிகளை கொடுத்து கோவை யினுடைய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி இருக்கின்றார்கள்.

அதோடு மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிலத்திட்டங்களை தந்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள். அனைத்து தரப்பட்ட மக்களாலும் வரவேற்பை பெற்றி ருக்கக்கூடிய மிகச் சிறப்பான ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

உள்ளபடியே தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள், தொழில் முனைவோர்கள், மகளிர்கள் என அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையாக வழங்கிய முதலமைச் சரை தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சார பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அது வெறும் அறிக்கை அல்ல; வரக்கூ டிய ஐந்து ஆண்டுகளில் நிறைவேற் றக்கூடிய வளர்ச்சி திட்டங்கள் என்பதை நம்முடைய முதல மைச்சர் நிரூபித்துக் காட்டி இருக்கின்றார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் கூட, இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி 10 தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கான முழு முயற்சி களையும் எடுத்து ஒரு மகத்தான வெற்றியை ஈட்டி கழகத் தலைவருடைய கரங்களிலே ஒப்படைப்போம் என்பதை மட்டும் இந்த நேரத்திலே வந்திருக்கக்கூடிய அத்தனை நல்லுள் ளங்களிடத்திலும் எடுத்துச் சொல்லி, தேர்தல் பணிகளை நாம் தொடங்கி இருக்கின்றோம். இன்றல்ல, நேற்றல்ல, ஏற்கனவே துவங்கி விட்டோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் அவர்கள், இரண்டாவது முறையாக தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்கள், அதில் கோவையில் இருக்கக்கூடிய 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம் என்ற வரலாற்றுச் சாதனையை உருவாக்கக்கூடிய வகையில் அனைவரும் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று அனைவரிடத்திலும் அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img