fbpx
Homeபிற செய்திகள்திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை - அதிமுக ஆட்சி அமைக்கும்: கோவை வேட்பாளர்...

திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை – அதிமுக ஆட்சி அமைக்கும்: கோவை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டாம் முறையாக போட்டியிடும் கே. ஆர்.ஜெயராமன் அறிமுக கூட்டம், சிங்காநல்லூர் தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலு மணி கலந்துகொண்டு வெற்றி வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து, சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர மாவட்ட கழக செயலாளரும், தெற்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளருமான அம்மன் கே.அர்ச்சுணன் உட்பட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக் கள் முன்னேற்ற கழகம் உட் பட தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய நிர்வா கிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

எஸ்.பி.வேலுமணிக்கு சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தொண்டர்கள் ஆளு யர மாலையும், வீர வாள் பரிசும் வழங்கினர். மலர் கிரீடம் மற்றும் செங்கோல் வழங்கினர்.

இந்த விழாவில் ஓபிஎஸுடன் நீண்டகாலம் பயணித்த பேரவை செல்வராஜ், மற்றும் தேமுதிக மாநில பொறுப்பாளர், விஜயகாந்துடன் 35 ஆண்டுகள் பயனித்த சிங்கை ஈஸ்வரன் ஆகியோர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வைகளை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் சிங்காநல்லூர் தொகு திக்கான வாக்குறுதி புத்தகத்தை முன்னாள் அமைச்ச ரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி வெளியிட அதை பாஜாக மாவட்ட செயலாளர் ரமேஷ் குமார் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பெற் றுக்கொண்டனர்.

வேட்பாளர் அறிமுக கூட் டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: சிங்காநல்லூர் தொகுதியில் மீண்டும் நமது கூட்டணி சார்பாக வேட் பாளராக அறிவிக்கப்பட்ட வுடன் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது. ஒரு சட் டமன்ற உறுப்பினர் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதா ரணமாக திகழ்ந்தவர் கே.ஆர்.ஜெயராமன். ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரின்போதும் கொரடாவான என்னிடம் பல்வேறு கோரிக்கைகளுடன் வந்து நிற்பார்.

கொரோனா காலத்தில் மக்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த போது, அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை உட்பட பல இடங்களில் சிறப்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அந்த நேரத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் வீடு,வீடாக சென்று மக்களுக்கு தேவையான அனைத்து பணி களையும் சேவையாக எடுத்து செய்தார் கே.ஆர்.ஜெயராமன்.

இந்த தொகுதியை பொருத் தவரை நான் அமைச்சராக இருந்தபோது மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்தோம். 50 ஆண்டுகள் வளர்ச்சியை கோவைக்கு கொடுத்துள்ளோம், குறிப்பாக சாலைகள், பாலங்கள், அனைத் தும் அமைத்து விபத்துகளை குறைத்தோம்.

மேலும் அரசு மருத்துவமனை யில் கேன்சர் சிகிச்சை, சிறுநீரக பிரச்சினைகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்தோம். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையை மாற்றியுள்ளோம்.

கோவை மாவட்டத்தில் இதுவரை ஏதாவது திட்டங் களை கொண்டு வந்ததாக திமுகவினரால் சொல்ல முடி யுமா? தற்பொழுது ஊடகங் கள் மனம் மாறியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் பேச்சுகளை ஒளிபரப்பி வருகிறார்கள். திமுக ஒருமுறை வெற்றி பெற்றால் அதன்பிறகு படுதோல்வியை சந் திக்கும் அதுதான் வரலாறு.

இன்று திமுகவிற்கு யாரும் வாக்களிக்க தயாராக இல்லை கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பாஜக 4 இடங்கள் உட்பட 21 தொகுதிகளிலும் முழு வெற்றியை பெறுவோம். பாரத பிரதமர் இக்கட்டான சூழ்நிலையிலும் 5 பெட்ரோல் கப்பல்கள் வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மெட்ரோ இரயிலுக்கு 65 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியது. அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் உறுதியாக ஆட்சி அமைக்கும்.

மேலும் சிங்காநல் லூர் சட்டமன்ற தேர்தலில் கே.ஆர்.ஜெயராமன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறுவார்.

அதுபோல் கோவை வடக்கு தொகுதியில் பாஜகவிற்காக களத்தில் இறங்கி தீவிரமாக களப்பணி ஆற்றவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img