கோவை மத்துவராயபுரம் சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலய வளாகத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி ஆயர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்று கையில் குருத்தோலைகளை ஏந்தி பாடல்களை பாடியபடி வந்த காட்சி. இதில் செயலாளர் டாக்டர் பிரின்ஸ் அருள்ராஜ், பொருளாளர் ஆனந்த் ஆசீர், திருமண்டலக்குழு உறுப்பினர்கள் ஜெபசிங், ஞானபிரகாசம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



