fbpx
Homeபிற செய்திகள்சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு இருவருக்கு ‘ஜவுளி முன்னோடி விருது

சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு இருவருக்கு ‘ஜவுளி முன்னோடி விருது

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் டெக்ஸெல்லன்ஸ் 2026 என்ற தலைப்பில் நடைபெற்றது. இக்கருத்தரங்கு மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களைப் புத்தாக்கம் மற்றும் கற்றலுக்கான ஒரு துடிப்பான தளத்தில் ஒன்றிணைக்கும் வகையில் அமைந்தது.

தொடக்க அமர்வில், டாக்டர் எம். வெங்கட லட்சுமி வரவேற்புரை வழங்கினார். இயக்குநர் டாக்டர் பி.அல்லி ராணி உலகளாவிய ஜவுளித் துறையில் நிறுவனத்தின் பங்கையும் கோவையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துத் தலைமையுரை ஆற்றினார்.

இத்துறைக்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்க ளிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், அதுல் ஆஷர் மற்றும் காந்தியல் ஜி.வோரா ஆகியோருக்கு ஜவுளி முன்னோடி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ரெப்கோ வங்கி மற்றும் விகிநி ஆகியவை இந்நிகழ்வின் முதன்மை ஆதரவாளர்களாக இருந்தன.

இந்தக் கருத்தரங்கில், சிறப்பு விருந்தினரான துரை பழனிசாமி உட்பட பல முக்கியப் பேச்சாளர்களின் ஆழ்ந்த விவாதங்கள் இடம்பெற்றன.
இதில் நிலைத்தன்மை மற்றும் எதிர்காலத் தொழில் வாய்ப்புகள் மீது கவனம் செலுத்தியது. ஜி.ஐ.இசெட் இந்தியாவின் டாக்டர் ரோசிட்சா க்ரூகர், நிலையான பருத்தி மற்றும் பொறுப்பான விநியோகச் சங்கிலிகளில் உள்ள முன்னெடுப்புகளை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சி, பரிசளிப்பு, புரவலர்களை அங்கீகரித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.

படிக்க வேண்டும்

spot_img