fbpx
Homeபிற செய்திகள்தேர்தல் அதிகாரிகளை கண்டித்து கடையடைப்பு போராட்டம் : வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு

தேர்தல் அதிகாரிகளை கண்டித்து கடையடைப்பு போராட்டம் : வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் பல்ல டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட் டம் முழுவதிலும் இருந்து நூற்றுக் கணக்கான வணிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பொதுக்குழுவில் பேசும்போது, நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கொடுக்கப் பட்ட 19 தீர்மானங்களை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கும் கட்சிக்கு தங்களது பேரமைப்பின் சார்பில் ஆதரவு கொடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “தேர்தலை காரணம் காட்டி சிறு வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்வதை கண்டித்து தேர் தலை ஒட்டி ஒரு வார காலத்திற்கு கடைகள் அனைத்தும் அடைத்து போராட்டம் நடத்தப்படும். மேலும் தற்போது காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய மாநில அரசு தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் லாலா கணேசன், மாநில துணை தலைவர் ஞானசேகர், பால நாகமாணிக்கம், ஆலூசர் அண்ணா துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img