fbpx
Homeபிற செய்திகள்பள்ளி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கோலாகலம்

பள்ளி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கோலாகலம்

சந்திர காந்தி பப்ளிக் பள்ளி கோவையில் அமைந்துள்ள ப்ளூ ஜெம்ஸ் மாண்டிச்சோரி பள்ளியில் லெவல்-3 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா பீளமேடு கிருஷ்ணம்மாள் கல்லூரி விளையாட்டு அரங்கில்  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் வைஷ்ணவி பங்கேற்று சிறப்புரையாற்றினார். 

பள்ளித் தாளாளர் நந்தினி வரவேற்புரை வழங்கினார். 

பள்ளி முதல்வர் கருணாம்பிகேஸ்வரி ஆண்டு அறிக்கை வாசித்தார். 

மேலும் அந்த நிகழ்வில் சிறந்த மாணவர்களை ஊக்கப்படுத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன் பின் மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆசிரியர்களும் கவிதை மற்றும் பாடலின் மூலமாக மூன்றாம் நிலை மாணவர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறினர்.

விழா முடிவில் மூன்றாம் நிலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 

அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஹைசிந்த்  நன்றியுரை வழங்கினார். விழாவில் பெற்றோர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பெருமைப்படுத்தினர். 

படிக்க வேண்டும்

spot_img