fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீனிவாசா பாம்சின் முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டம்

ஸ்ரீனிவாசா பாம்சின் முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டம்

தென்னிந்தியாவின் மிக நம்பிக்கைக்குரிய முதியோர் குடியிருப்பு உருவாக்குனர்களில் ஒருவராகிய ‘ஆலம் ஸ்டெப்ஸ்டோன் சீனியர் ஹெவன் புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நாட்டின் முதல் ‘3-இன்-1’ முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டமான ‘ஸ்ரீனிவாசா பாம்ஸ்’-ஐ உருவாக்கியுள்ளது. இதன் இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோயம்புத்தூர், ஃபேர்ஃபீல்ட் பை மேரியட் ஹோட்டலில் மார்ச் 13 முதல் 15 வரை இந்நிறுவனத்தின் கண்காட்சி நடைபெற்றது.

இதில் வீடு வாங்குவோருக்கு, பத்திரப் பதிவு இலவசமாக செய்து தரப்படும். ஒரு குடியிருப்பின் விலை ரூ.37 லட்சத்திலிருந்து தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகில், மிக அமைதியான சூழலில், 1.18 ஏக்கர் பரப்பளவில் பசுமையான தென்னந்தோப்புகளுக்கு இடையே இக்குடியிருப்புத் திட்டம் அமைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் நிறுவனரும், மேலாண் இயக்குநருமான மோதிஷ்குமார், “ஸ்ரீனி வாசா பாம்ஸ் இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டம் என்பது வெறும் வீடுகளைக் கட்டுவது மட்டுமல்லாமல், முதியவர்களது மகிழ்ச்சி, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுடன் மலிவு விலையில் வாழ்வதற்கு ஏற்ற ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதாகும்“ என்றார்.

இந்த தொடக்க விழாவில் சென்னையைச் சேர்ந்த டாக்டர் மீனலோச்சினி, சுற்றுச்சூழல் ஆர் வலர் உமா பாஸ்கர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரி முத்துக்குமாரசாமி மற்றும் வெங்கடேஸ்வரா தேங்காய் உற்பத்தியாளர்கள் நிறுவனத் தின் தலைவர் அறிவொளி ஆர்.முத்து சாமி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img