கோவை கொங்குநாடு மருத்துவமனையில் கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் ரத்ததானம் வழங்கினர்.
இந்த தேவனுடைய சபையானது நிறுவனர் அன்சாங்ஹோங் என்பவரால் 1964-ல் கொரியாவில் நிறுவப்பட்டு உலகெங்கிலும் 175+ நாடுகளில் 7500 கிளைகளைக் கொண்ட ஒரு உலகளாவிய சபையாகும்.
40 லட்சத்திற்கும் அதிகமான விசுவாசிகள் வேதாகமத்தின்படி தந்தையாகிய மற்றும் தாயாகிய தேவன் மீது நம்பிக்கை கொண்டு, ஆரம்பகால சபை செய்தது போலவே புதிய உடன்படிக்கையின் பஸ்கா பண்டிகையை அனுசரிக்கிறது.
இந்த சபையானது ‘உன்னை நேசிப்பது போல உன் அண்டை வீட்டாரையும் நேசி’ என்ற இயேசு கிறிஸ்துவின் போதனையை நடைமுறைப்படுத்த உறுப்பினர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

உள் நாட்டிலும் வெளிநாட்டி லும் இரத்ததானம் இயக்கம், தூய்மைப் பணி இயக்கம், பேரிடர் நிவாரணம் உட்பட 45,000க்கும் மேற்பட்ட சமூகப் பங்களிப்பு நடவடிக்கை களை உலக முழுக்க செய்து வருகிறது.
கோவையில் நடந்த 1813வது ரத்ததான முகாமில் சிறப்பு விருந்தினர்களாக வார்டு கவுன்சிலர் காயத்ரி கலந்து கொண்டார்.
மேலும் கொங்குநாடு மருத்துவமனை தலைவர் டாக்டர் ராஜூ சிறப்புரையாற்றினார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக கோவையில் தேவனுடைய சபையின் கண்காணிப்பாளர் ராகேஷ், திருச்சியில் தேவனுடைய சபையின் கண்காணிப்பாளர் பெஞ்சமின் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.
130 உறுப்பினர்களிடமிருத்து 58500 மில்லி லிட்டர் ரத்தம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.



