ரெயின்டராப்ஸ்’ சமூக, அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தையொட்டி பெண்களை கவுரவிக்கும் வகையில் சாதனை பெண் களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு துறைகளிலும் சாதித்து கொண்டு இருக்கும் பெண்களை தேர்வு செய்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் பிரித்வி இன்னர்வேர்ஸ், ஆர்.எ. ஹேண்டிகிராப்ட்ஸ் விளக்கு கடை மற்றும் பார்வதி மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் 13-வது ஆண்டு சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை அண்ணா சாலை ராணி சீதை ஹாலில் நடைபெற்றது.
இந்த விழாவில் 13 பெண்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதன்படி, வாழ்நாள் சாதனையாளர் விருது சக்தி மசாலா இயக்குனர் சாந்தி துரைசாமிக்கும், பின்னணி பாடகி கலை மாமணி சுஜாதா மோகனுக்கும் வழங்கப்பட்டன.
விழாவில், நடிகர் சிவகுமார், இஸ்ரோ விஞ்ஞானி நிகார் ஷாஜி, ஆற்காடு நவாப் ஆசிப்அலி, எத்திராஜ் மகளிர் கல்லூரி தலைவர் முரளிதரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெய்ஹானா, நடிகை வடிவுக்கரசி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகர் கணேஷ்-ஆர்த்தி உள்படபலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



