fbpx
Homeபிற செய்திகள்ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் சார்பில் மகளிர் தினம் கோலாகலம்

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் சார்பில் மகளிர் தினம் கோலாகலம்

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட், மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது.

மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஒன்பது மாநிலங்களில் உள்ள 189 குளிர்விக்கும் மையங்களில் பெரிய அளவிலான கொண்டாட்டங்கள்
நடத்தப்பட்டன.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத் தின் கொள்முதல் வலையமைப்பின் முதுகெலும்பாக பெண்கள் உள்ளனர். நிறுவனத்தின் 4,600 ஹெரிடேஜ் கொள்முதல் மையங்களில் (HPCs), 2,000க்கும் மேற்பட்டவை -தோராயமாக 42% – பெண்களால் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் தெலங்கானாவின் ஷாட்நகரில் உள்ள நந்திகாமா கிராமத்தில் நடைபெற்ற பெண் பால் பண்ணையாளர்களுடனான கலந்துரையாடல் சந்திப்பு நடைபெற்றது. இந்தப் பகுதியில் இருந்து சுமார் 500 பெண் விவசாயிகள் ஒன்று கூடினர்.

ஹெரிடேஜ் விநியோகச் சங்கிலியில் சிறந்து விளங்கும் பெண் விவசாயிகளின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் பாராட்டு விழாவும் இந்த நிகழ்வில் இடம்பெற்றது.

இதில் ஹெரிடேஜ் ஃபுட்ஸின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான
புவனேஷ்வரி நாரா, ஹெரிடேஜ் நிறுவனத்தில், பெண்களின் பணி
அங்கீகரிக்கப்படுவதையும், அவர்களின் ஊதியங்கள் வெளிப்படையானதாகவும், சரியான நேரத்திலும் இருப்பதையும், அவர்களின் தலைமை தொடர்ந்து வளர்வதையும் உறுதி செய்வதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்,” என்று கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img