fbpx
Homeபிற செய்திகள்மகளிர் தினத்தை முன்னிட்டு கே.எம்.சி.ஹெச் சார்பில் கையெழுத்து இயக்கம்

மகளிர் தினத்தை முன்னிட்டு கே.எம்.சி.ஹெச் சார்பில் கையெழுத்து இயக்கம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் ஆரோக்கி யம் மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை சார்பில் கோவையின் பல்வேறு இடங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நகரம் முழுவதும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மார்ச் 7ம் தேதி காலை கோவை இரயில் நிலை யத்தில் தொடங்கின.

கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் கீதாஞ்சலி மற்றும் இரயில் நிலைய இயக்குனர் பழனியப்பன் ஆகியோர் கேஎம்சிஹெச் மருத்துவமனை உயரதிகா ரிகள் முன்னிலையில் இதனைத் துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) முழுவதும் புரோசோன் மாலில் இந்த முகாம் தொடர்ந்தது. கேஎம்சி ஹெச்-ன் செயல் இயக்குனர் டாக்டர் அருண் N பழனிசாமி இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்து பெண்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பரிசுகள் மற்றும் சலுகைகள்: மகளிர் தின கொண்டாட்டத்தை உற்சாகப்படுத்தும் வகையில், இரண்டு இடங்களிலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை குலுக்கல் முறையிலான போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும், மருத்துவப் பரிசோதனைகளுக்கான சலுகைக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img