fbpx
Homeபிற செய்திகள்ரோபோடிக்ஸ், பிஎல்சி தானியக்கத்திற்கான சிறப்பு மையம் துவக்கம்

ரோபோடிக்ஸ், பிஎல்சி தானியக்கத்திற்கான சிறப்பு மையம் துவக்கம்

டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் ரோபோடிக்ஸ் மற்றும் பிஎல்சி ஆட்டோ மேஷனுக்கான சிறப்பு மையத்தை திறந்துள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந் நடவடிக்கையை அது மேற்கொண்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் மாணாக்கர்கள் பெறும் கற்றலுக்கும், தொழில்துறையில் உண்மையான பயன்பாடுகளுக்கான தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில், தொழிலக தானியக்க செயல்பாடுகளுக்கு மாணவர்களுக்கான அதிநவீன பயிற்சி மையமாக இது அமைக்கப்பட்டுள்ளது.

டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் நாயக் மேலும் கூறுகையில், “TNSDC-ன் முக்கிய திட்டமான ‘வெற்றி நிச்சயம்‘ மூலம், இந்த மையத்தில் மாதந்தோறும் 120 மணிநேர குறுகிய காலப் பயிற்சித் திட்டங்களும், காலாண்டு அடிப்படையில் ஒருமுறை 272 மணிநேர நீண்ட காலப் பயிற்சித் திட்டங்களும் நடத்தப்படும்.

ஒவ்வொரு பேட்சிலும் தேவைக்கு ஏற்ப 20 முதல் 25 பேர் வரை பயிற்சி பெறலாம்.

தொழில்துறை தேவைகளுடன் நேரடி தொடர்புள்ள மற்றும் அளவிடத்தக்க திறன் விளைவுகள் கிடைப்பதை உறுதி செய்யும் விதத்தில் இப்பயிற்சியின் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்TNSDC-யுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பின் மூலம், இந்தியாவின் உற்பத்தித் துறையில் நிலை மாற்றம் மற்றும் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா உறுதிப்படுத்துகிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img