சாய் சமூக சேவை என்ற அரசு சாரா அமைப்பு சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கோயம் புத்தூர் ஹோப் காலேஜ் அரு கிலுள்ள கிளஸ்டர் மீடியா கல்லூரியில் சமூக சேவையில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் விழாவும், புற்றுநோய் விழிப்புணர்வு கையேடு வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சாய் சமூக சேவை நிறுவனர் அறிவ ழகன், முன்னாள் மாவட்ட நீதிபதி சசிகலா, அரோமா சி.இ.ஓ விஜயலட்சுமி, டாக்டர் கோவர்த்தினி, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி விஜயலட்சுமி பிச்சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து புற்றுநோய் விழிப்புணர்வு கையேடு டாக்டர் கோவர்த்தினி வெளியிட அதை முன்னாள் மாவட்ட நீதிபதி சசிகலா பெற்றுக் கொண்டார்.
மேலும் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் சிறந்த பெண்கள் மற்றும் சமூக சேவையாளர் களுக்கு “சேவைநாயகி 2026” விருதுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டது.



