fbpx
Homeபிற செய்திகள்கோவையில் டேலண்ட் இந்தியா 6.0 தேசிய மாநாடு

கோவையில் டேலண்ட் இந்தியா 6.0 தேசிய மாநாடு

தமிழ்நாடு பயிற்சி மற்றும் பணியிட ஒதுக்கீடு அலுவலர்கள் சங்கம் டேலண்ட் இந்தியா 6.0 – டி.பி.ஒ ஹெச்.ஆர் தலைமை இணைப்பு என்ற தேசிய அளவிலான மாநாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த மாநாடு வேலைவாய்ப்பு திறன், பணிக்கான தயார்நிலை மற்றும் தொழில் சார்ந்த கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தியது, இது கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு டி.என்.எ.டி.பி.ஒ தலைவர் டாக்டர் கணேஷ் கிரிஷ் (அகில இந்திய டி.பி.ஒ சங்கத்தின் நிறுவன புரவலர் மற்றும் பொதுச் செயலாளர்) தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் கே.செந்தில் கணேஷ் (ஆர்.வி.எஸ் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர்), டாக்டர் பி. கிருஷ்ண குமார் (நேரு குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி), டாக்டர் தாமஸ் ஜார்ஜ் (கே லீட் கல்லூரி மேலாண்மை) மற்றும் டாக்டர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன் (கேரள அரசு உயர் கல்வித் துறை நோடல் அதிகாரி) ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஒரு நாள் நிகழ்வு தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த முதல்வர்கள், பயிற்சி மற்றும் பணியிட ஒதுக்கீடு அலுவலர்கள், ஹெச்.ஆர் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்களை ஒன்றிணைத்தது.
டேலென்ட் இந்தியா 6.0 இன் ஒரு பகுதியாக, ஜிழிகிஜிறிளி பல முக்கிய நிறுவன மற்றும் உத்திசார் முன்னேற்றங்களை அறிவித்தது. முக்கிய அம்சமாக டி.என் திறன் & வேலைவாய்ப்பு குறியீடு வெளியீடு இருந்தது. மாநாட்டில் ஸ்பார்க் என்ற தேசிய அளவிலான மாணவர் இதழ் வெளியிடப்பட்டது.

இந்த மாநாடு டேலண்ட் இந்தியா எமர்ஜிங் ஹெச்.ஆர் எக்ஸலன்ஸ் அவார்ட்ஸ் 2026 உடன் முடிவடைந்தது.

படிக்க வேண்டும்

spot_img