கடலூர் காட்டுமன்னார் கோயில் எம்.ஆர்.கே நினைவு அறக்கட்டளை கல்வி நிறுவனங்கள் சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் நிர்வாக அதிகாரி முனைவர் பழனிவேல் தேசிய கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.
எம்.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் கே. முத்து, கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் பாரதி, நிர்வாக அலுவலர் மாசிலாமணி மற்றும் மருந்தியல் கல்லூரி முதல்வர் ( பொ) முனைவர் வீரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ம. சுந்தர பாண்டியன் நன்றி உரையாற்றினார்.
விழா ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் நெப்போலியன் மற்றும் பேராசிரியர்கள் ஆனந்த் கபில்தேவ், திருவேங்கட ராமானுஜன், பிரவீன் மற்றும் ரூபா குளோரி சிறப்பாக செய்திருந்தனர்.



