சிதம்பரத்தில் 77-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (கடலூர் தெற்கு மாவட்டம்) மற்றும் கடலூர் தலைமை அரசு மருத்துவமனை சார்பில் இரத்ததான முகாம் சிதம்பரம் லப்பை தெரு பள்ளிவாசல் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்டத் தலைவர் முகமது ஃபஹத் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் டிஸ்பி பிரதீப், சிதம்பரம் நகர காவல் துறை ஆய்வாளர் சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜப ருல்லா, பொருளாளர் அப்துல் அஹத், மாவட்டதுணை தலைவர் மகப்கான் துணை செயலாளர் மைதீன், மாவட்ட மாணவரணி செயலாளர் சவுக்கத் அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். முகாமில் 100 நபர்கள் ரத்ததானம் வழங்கினர். அனைவருக்கும் மரக்கன்றும் சான்றிதழும் வழங்கி கௌரவித்தனர்.



