தூத்துக்குடி மாவட்டம் – எட்டயபுரம் பேரூராட்சி 9-வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் பொது நிதியின் கீழ் ரூ.27-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக்சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் பேரூ ராட்சி செயல் அலுவலர் மகாராஜன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், எட்ட யபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதி கணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், மாவட்ட பிரதிநிதி பரமசிவம், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி, வார்டு உறுப்பினர்கள் மணிகண்டன், குமார், வார்டு செயலாளர்கள் ராம் குமார், மாரிக் கண்ணன், பிச்சு மணி, மஞ்சமாதாதேவி, அருள்சுந்தர், பேரூர் கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன். அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் குருசாமி, மகளிரணி முருகலட்சுமி, இளைஞர் அணி அய்யனார்ராஜா, மதன், சூர்யா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



