fbpx
Homeபிற செய்திகள்மதுரையில் அகில இந்திய குழந்தையின்மை மருத்துவர் மாநாடு

மதுரையில் அகில இந்திய குழந்தையின்மை மருத்துவர் மாநாடு

அகில இந்திய குழந்தையின்மை மருத்துவர்கள் நடத்திய மாநாடு மதுரை பாப்பீஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த மருத்துவ மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் மதுரை குரு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், பாக்சி குழந்தையின்மை கமிட்டியின் அகில இந்திய தலைவரும் மற்றும் எம்காட் தலைவருமான டாக்டர்.பி.கல்பனா குரு அனைவரையும் வரவேற்று பேசினார்.

டாபிசார் தலைவர் டாக்டர் சரத் பாட்டினா தலைமை தாங்கினார். இஸ்சார் செயலாளர் டாக்டர்.ஆஷா பக்சி செயலாளர் உரையாற்றினார். நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சஞ்சீவ ரெட்டி உரையாற்றினார்.

இந்த மருத்துவ மாநாட்டிற்கு மதுரை மாநகர் காவல்துறை போக்குவரத்து பிரிவு துணை ஆணையாளர் எஸ்.வனிதா கலந்து கொண்டு மருத்துவ மா நாட்டு சிறப்புரை ஆற்றி னார். டாபிசார் (TAPISAR) செயலாளர் டாக்டர். ராதா வெம்பூ உரையாற்றினார்.

மதுரை குரு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், பாக்சி குழந்தையின்மை கமிட்டியின் அகில இந்திய தலைவரும் மற்றும் எம்காட் தலைவரும், தென் தமிழகத்தின் பிரபல குழந்தையின்மை மருத்துவருமான டாக்டர் பி.கல்பனா குழந்தை யின்மை மற்றும் மலட்டுத் தன்மை என்ற தலைப்பில் பேசினார்.

மதுரை குரு மருத்துவமனையின் தலைவரும், தென் தமிழ கத்தின் பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர்.எஸ்.ஜி.பாலமுருகன் புற்றுநோயும் கருவுற்றலும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

மாநாட்டில், குழந்தையின்மை மருத்துவத்தில் அதிநவீன வசதிகள், தொழில்நுட்பங்கள் முதலியன பற்றி சிறப்பு மருத்துவ கலந்தாய்வுகள் நடைபெற்றது. குழந்தையின்மை மருத்துவத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

அகில இந்திய அளவில் 100 சிறப்பு மருத்துவ பேச்சாளர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். எம்காட் செயலாளர் டாக்டர்.சாந்தா தேவி உரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img