fbpx
Homeபிற செய்திகள்தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி உதகையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினார்.

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகர், ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், ஜீப், டாக்ஸி டிரைவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வாகனத்தின் இயக்கத்தை நிறுத்தி பாதசாரிகளுக்கு வழி விட வேண்டும், வாகன விபத்துகளின்போது உயிரிழப்பை தடுக்க சீட் பெல்ட் அணிய வேண்டும், விபத்துகளை தடுத்துவிடும் வகையில் சாலை குறியீடு களையும் விதி களையும் மதிக்க வேண்டும், வேக வரம்பினை மதிக்க வேண்டும், வாகனங்களை சரியாக பராமரிப்புடன் வைத்திருக்க வேண்டும், வாகனத்தை ஓட்டும் போது கைபேசியை பயன்படுத்தக் கூடாது, இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும், அபாயகரமாக வாகனத்தை இயக்கக் கூடாது, விட்டுக் கொடுக் கும் தன்மை வேண்டும், மது அருந்திவிட்டு வாக னங்களை இயக்கக் கூடாது ஆகிய 10 வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 31ம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது குறிப் பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img