கோவையைச் சேர்ந்த ரெயின்போ டிஃபென்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாணவர்கள், டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் காரைக்காலில் நடைபெற்ற SGADF தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான சாதனை படைத்தனர்.
தமிழ்நாட்டின் சார்பில் தலைமை பயிற்சியாளர் ரென்ஷி ஆர்.கிருஷ்ண வேணி வழிகாட்டுதலின் கீழ் 29 மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
இப்போட்டிகளில் ரெயின்போ டிஃபென்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அணி 4 தங்கப் பதக்கங்கள் (முதல் பரிசு), 3 வெள்ளிப் பதக்கங்கள் (இரண்டாம் பரிசு), 21 வெண்கலப் பதக்கங்கள் (மூன்றாம் பரிசு) பெற்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றிப் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் வழங்கி, வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சியாளர்களையும் பாராட்டினார்.
மாணவர்களின் இந்த வெற்றிக்கு பெற்றோர்களின் ஊக்கமும் ஆதரவும் முக்கிய காரணமாக இருந்தது. இந்த சாதனை, தமிழ்நாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியின் மேன்மையை வெளிப்படுத்துகிறது.
SGADF தேசிய விளையாட்டுப் போட்டிகள் – 2025 இல் ரெயின்போ டிஃபென்ஸ் தற்காப்புக் கலைகளைச் சேர்ந்த மாணவர்கள், கட்டா, குமிட்டி மற்றும் சிலம்பம் நிகழ்வுகளில் சிறப் பாக ஆடி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தினர்.
வெற்றி வாகை சூடியவர்கள் விவரம்:
கட்டா – பெண்கள் – அஞ்சனா.பி (9 வயது), ஹிருத்திக்ஷா.வி (8), யாழினி.எஸ் (10), ஸ்ரீ சுன்மதி.கே (9), மனிஷா.பி (12), விஜிதா ஆர்.எஸ். (13), மதுமிதா.எஸ். (13), பிரத்திகா.ஆர்.வி (13), அபர்ணா.பி (15) ஹரிணி.யு.எஸ் (20).
கட்டா – சிறுவர்கள்: கவிஷ்.ஜே.இ (6), ஸ்ரீ குஹன்.எஸ் (8), ஜஸ்வந்த்.ஏ (9), மித்ரன்.ஜி.எஸ் (9), தனுஷ்.எஸ் (10), தௌஷிக் தர்ஷன்.எம் (11 வயது), கார்த்திக் எஸ் (11 வயது), சூரஜ் அமர் மானே (13).
குமிடே பெண்கள்: ஷிவானி.ஆர் (14),
சிறுவர்கள்: கோபினேஷ்.ஜி. (10), ஸ்ரீ விக்னேஷ்.எஸ் (10), ஹர்ஷன்.ஏ (10), அன்பு.ஆர். எஸ் (11), மௌலீஷ்வரன்.ஜி (12), குமாரவேல்.எஸ் (15), குரு ஸ்ரீ தர்ஷ்னா (16), ரோஹித்.என். டி. (20).
சிலம்பம்: கவின்.ஆர் (13 வயது) &- சிங்கிள் ஸ்டிக்.
தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற மாணவர்களை சென்செய் சுஜன்.எஸ், சென்செய் விக்ரம் .டி மற்றும் சென்செய் வைஷ்ணவே.எச் ஆகியோர் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.



