fbpx
Homeபிற செய்திகள்கோட்டப்பூண்டி ஊராட்சியில் புதிய நாடக மேடை கட்டிடம்: செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

கோட்டப்பூண்டி ஊராட்சியில் புதிய நாடக மேடை கட்டிடம்: செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலை யனூர் ஒன்றியம் கோட்டப்பூண்டி ஊராட்சியில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடக மேடை கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய நாடகமேடையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், மேல்மலையனூர் வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், ஒன்றிய செயலாளர்கள் சாந்தி சுப்பிரமணியன், நாராயணமூர்த்தி, மேல்மலையனூர் ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி முருகன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மதுசூதனன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img