கோவை சின்னவேடம் பட்டி சிரவணபுரம் கௌமார மடாலயத்தின் நான்காவது குருபீடம் முனைவர் தவத்திரு இராமானந்த குமர குருபர சுவாமிகள் கூறியதாவது:-
கௌமார மடாலயம் கடந்த 135 ஆண்டுகளுக்கு முன் இராமானந்த சுவாமி களால் நிறுவப்பட்டது. தவத்திரு. கஜபூஜை கந்தசாமி சுவாமிகளின் முதன்மை சீடரான தவத்திரு. குமர குருபர சுவாமிகள் தற்போது நான்காவது பட்டமாக செயல்பட்டு வருகிறார். இவர் தவத்திரு. கந்த சாமி சுவாமிகளின் இலக்கியங்களில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
கடந்த 30 ஆண்டுகளாக தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் சமய பணி மட்டுமின்றி சமுதாய பணி, கல்வி பணி, இலக்கிய பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார். இத்தனை சிறப்பு மிக்க சிரவை ஆதீ னத்தை தோற்றுவித்து முதல் குருமகா சந்நிதானமாக அருளாட்சி செய்த திருவருள்திரு. இராமா னந்த சுவாமிகளின் 69வது ஆண்டு குருபூஜை நிறைவு விழா, நூல்கள் வெளியீட்டு விழா, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக் களும் மற்றும் குரு மகா சந்நிதானங்களின் ரத ஊர்வலம் ஆகிய நிகழ்ச் சிகள் வருகிற 5-ந்தேதி (திங்கள் கிழமை, 6-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) இரண்டு நாட்கள் நடக்கிறது.
5-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திருப்புகழ் இன்னிசை, சொற்பொழிவு நிகழ்ச்சி, பக்தி இன்னிசை நிகழ்ச்சி, மேஜிக் ஷோ, நாட்டிய நாடகம், பெருஞ் சலங்கை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 6-ந்தேதி காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை வேள்வி, பெருந்திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, அடியார்தமை அமுது செய்விக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு மடத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கில் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் தலைமையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.
முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனர் டாக்டர் கே.குமாரசாமி வரவேற்று பேசுகிறார். விழாவில் அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பாலகுருசாமி, அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் குழந்தைவேல், ஐ.நா. சபை சிறப்பு தூதர் ராஜா பி.ஆறுமுகம், மலேசிய நாட்டை சேர்ந்த டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன், லண்டனை சேர்ந்த சிவ.தம்பு. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கணேஷ் குமார், வடவள்ளி திருப்புகழ் குழுவை சேர்ந்த வைத்தியநாதன் மற்றும் கௌமார மடாலயத்தை சேர்ந்த தவில்-நாதஸ்வர கலைஞர்களான கனக ராஜ், கோவிந்தராஜ். மாணிக்கராஜ், கணேசன் ஆகியோர் விருது பெறுகிறார்கள். விழாவில் தவத்திரு. தண்டபாணி சுவாமிகளின் 5-க்கும் மேற்பட்ட நூல்களின் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது.
விழாவில் பேரூராதீனம் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார், தாராபுரம் வரன்பாளையம் திருநாவுக்கரசு திருமடம் மௌன சிவாச்சல அடிகளார், தென்சேரி மலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிக ளார், காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான ஆன்மீக பெரியோர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்ற னர். மாலை 3.30மணிக்கு சந்நிதானங்களின் ரத யாத்திரை நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கௌமார மடாலயத்தின் முதல் குருமகா சந்நிதானமான இராமானந்த சுவாமிகளின் திருவுருவ சிலை எழுந்தருள செய்யப்படுகிறது. அந்த ரதம் கௌமார மடா லயத்தில் இருந்து புறப்பட்டு சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, சிவானந் தபுரம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோவில் களை சென்றடைகிறது. அங்கு பக்தர்கள், முருக பக்த பேரவையினர், பொதுமக்கள் பிரமாண்ட மான வரவேற்பு கொடுக்கி றார்கள். பின்னர் ரதம் அன்று இரவில் கோவிலை வந்தடையும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டி யின் போது முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனர் டாக்டர் கே.குமாரசாமி உடன் இருந்தார்.



