கோவை காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் பெண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆடல், பாடல், நடனங்கள் ஆடி பெண்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் வரும் 25 ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டிசம்பர் மாதம் துவக்கம் முதலே கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் பல்வேறு ஆலயங்களில் நடைபெறுவது வழக்கம்.
இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் , சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம் பெண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் தின விழாவை வரவேற்கும் விதமாக ஆலய வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆலயத்தின் ஆயர் அருட்திரு ஜெ.விகேஷ் மார்க்கஸ் ஜெபம் செய்து ஆரம்பித்து வைத்தார்.
இதில் பெண்கள் ஐக்கிய சங்கம் சர்பாக கலந்து கொண்ட பெண்கள் உற்சாகமாக பாடல்கள் பாடியும்,, நடனமாடியும் தங்கள், மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு குறு நாடகங்கள் மூலமாக கிறிஸ்துவின் பிறப்பின் பண்டிகையை அனை வருக்கும் அறிவித்தனர்.
இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்று ஆடல்பாடி நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர்.



